உயிர்மெய் வருக்கம்
14. கண்டொன்று சொல்லேல்
பொருள்: பார்த்ததைவிட்டு வேறொன்று கூறாதே.
15. ஙப் போல் வளை
பொருள்: 'ங' எழுத்தைப்போல் வளைந்து கொடுத்து வாழவேண்டும்.
16. சனி நீராடு
பொருள்: சனிக்கிழமைத்தோறும் எண்ணெய் தேய்த்துக்குளி.
17. ஞயம்பட உரை
பொருள்: எதையும் கனிவாகக் கூறு.
18. இடம்பட வீடு எடேல்
பொருள்: தேவைக்கு அதிகமாக வீட்டைக் கட்டாதே.
19. இணக்கம் அறிந்து இணங்கு
பொருள்: ஒருவன் பண்புள்ளவனா என்பதை நன்கு தெளிந்தபின் பழகவேண்டும்.
20. தந்தை தாய்ப் பேண்
பொருள்: பெற்றோரை நன்கு பாதுகாக்க வேண்டும்.
21. நன்றி மறவேல்
பொருள்: ஒருவர் செய்த உதவியை என்றும் மறக்கக் கூடாது.
22. பருவத்தே பயிர் செய்
பொருள்: தகுந்த பருவம் இருக்கும்போது உழுது பயிரிடவேண்டும்.
23. மண் பறித்து உண்ணேல்
பொருள்: பிறர் நிலத்தை அபகரித்து அதன் வருவாயைக் கொண்டு உண்டு வாழக்கூடாது.
24. இயல்பு அலாதன செய்யேல்
பொருள்: நடைமுறைக்கு மாறான செயல்களில் ஈடுபடக்கூடாது.
25. அரவம் ஆட்டேல்
பொருள்: பாம்புடன் விளையாடினால் விபரீதம் ஏற்படும்.
26. இலவம் பஞ்சில் துயில்
பொருள்: இலவம் பஞ்சு மெத்தையில் படுப்பது நலம் தரும்.
27. வஞ்சகம் பேசேல்
பொருள்: தீயவற்றை பேசுதல் கூடாது.
28. அழகு அலாதன செய்யேல்
பொருள்: நன்மையற்ற செயல்களை செய்தல் கூடாது.
29. இளமையில் கல்
பொருள்: இளமைப் பருவத்திலேயே கல்விக் கற்பது சிறப்பு.
30. அரனை மறவேல்
பொருள்: இறைவனைத் துதிப்பதை ஒருபோதும் மறக்காதே.
31. அனந்தல் ஆடேல்
பொருள்: கடல் நீரில் விளையாடுதல் விபரீதம் விளைவிக்கும்.