ஆத்திச்சூடி - உயிர் வருக்கம் [Aathichudi - Uyir Varukkam]

உயிர் வருக்கம்

01. அறம் செய விரும்பு
பொருள்: நற்பணிகள் செய்ய விருப்பம் கொள்வாயாக.

02. ஆறுவது சினம்
பொருள்: கோபத்தை தவிர்க்க வேண்டும்.

03. இயல்வது கரவேல்
பொருள்: இயன்ற நன்மைகள் செய்யாமல் இருத்தல் ஆகாது.

04. ஈவது விலக்கேல்
பொருள்: பிறருக்கு உதவுவதை நிறுத்தாதே.

05. உடையது விளம்பேல்
பொருள்: உனது நன்மை தீமைகளை வெளியில் கூறாதே.

06. ஊக்கமது கைவிடேல்
பொருள்: எந்த சூழ்நிலையிலும் மன உறுதியை தளரவிடகூடாது.

07. எண் எழுத்து இகழேல்
பொருள்: கணிதத்திற்கு அடிப்படையான எண்ணையும் இலக்கியத்திற்கு ஆதாரமான எழுத்தையும் இகழகூடாது.

08. ஏற்பது இகழ்ச்சி
பொருள்: பிறரிடம் யாசிப்பது இழிவான செயலாகும்.

09. ஐயம் இட்டு உண்
பொருள்: பசி என்று வந்தவருக்கு உணவு அளித்தபின் உண்ணவேண்டும்.

10. ஒப்புரவு ஒழுகு
பொருள்: உலக நடைமுறைக்கு ஏற்றபடி அனுசரித்து நடப்பாயாக.

11. ஓதுவது ஒழியேல்
பொருள்: படிப்பதை ஒருபோதும் நிறுத்தி விடாதே.

12. ஔவியம் பேசேல்
பொருள்: பொறாமை கொண்டு பேசுவது கூடாது.

13. அஃகம் சுருக்கேல்
பொருள்: தானியத்தை எடை குறைத்து அளக்காதே.