உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
முருகனே செந்தில் முதல்வனே மாயோன்
மருகனே ஈசன் மகனே - ஒருகை முகன்
தம்பியே நின்னுடைய தண்டைக் கால்
எப்பொழுதும் நம்பியே கைதொழுவேன் நான்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஆறிரு தடந்தோள் வாழ்க!
அறுமுகம் வாழ்க! வெற்பைக்
கூறுசெய் தனிவேல் வாழ்க!
குக்குடம் வாழ்க! செவ்வேள்
ஏறிய மஞ்ஞை வாழ்க!
யானைதன் அணங்கும் வாழ்க!
மாறிலா வள்ளி வாழ்க!
வாழ்கசீர் அடியார் எல்லாம்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நாள்என் செயும் வினைதான் என்
செயும் எனை நாடி வந்த
கோள்என் செயும் கொடுங் கூற்றென்
செயும் குமரேசர் இரு
தாளும் சிலம்பும் சதங்கையும்
தண்டையும் சண்முகமும்
தோளும் கடம்பும் எனக்கு
முன்னே வந்து தோன்றிடினே!