முதற் பக்கம்

தமிழ்த்தாய் வாழ்த்து

நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே!
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!
                                                                                                 தமிழணங்கே!
உன் சீரிளமைத் திறம் வியந்து
செயல் மறந்து வாழ்த்துதுமே!
                                      வாழ்த்துதுமே!
                                      வாழ்த்துதுமே!

{மனோன்மணீயம் பெ. சுந்தரம்பிள்ளை}
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

தாயே உயிரே தமிழே நினைவணங்கும்
சேயேன் பெறற்கரிய செல்வமே - நீயே
தலை நின்றாய் இவ்வுலகில் தாள்பணிந்தேன் நீயுங்
கிலையென்றால் இன்பமெனக் கேது?

{முடியரசன்}
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

முக்கிய தொடர்பு சுட்டி: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இவ்வலைப்பதிவின் தொடர்பு சுட்டிகள்:

திருநெறிய தமிழ்

ஆத்திச்சூடி

கொன்றை வேந்தன்

சங்கத் தமிழ்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~